செய்திகள்
புலிகள் மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது விதித்துள்ள தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக்கான போராட்டம் என்பது மாற்றப்பட்டு தற்போது ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் விடுதலைப் புலிகள் மீது தடைகளை இந்தியா தொடர்ந்து வைத்திருப்பது நல்லதல்ல. அந்த தடையை இந்தியா நீக்கவேண்டும். அப்போதுதான் ஏனைய நாடுகளும் அந்த தடையை நீக்குவதற்கான முனைப்புக்களில் ஈடுபடுவார்கள்.
நடைபெறவிருக்கின்ற மனித உரிமைகளுக்கான மாநாட்டில் இந்தியா காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தியாவின் தேசிய நலனோடு ஈழத்தமிழர்கள் அக்கறையாக செயற்படுகின்றோம். அந்த வகையில் இலங்கை தமிழர்கள் தேசிய நலன் சார்ந்த விடயத்திலும் இந்தியா உண்மையாகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக பொய்யான கருத்தை கூறி இருக்கின்றார். உண்மையில் தலைவருடன் நெருக்கமாக இருந்த போராளிகளில் நானும் ஒருவன்.
விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login