செய்திகள்

நகுலேஸ்வரப் பெருமானுக்கு இன்று கொடி!!

Published

on

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(16) முற்பகல் 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்றில் இருந்து தொடர்ந்தும் 15 தினங்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்குப் பெரிய சப்பரத் திருவிழாவும், முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும் இடம்பெறும்.

அன்றைய தினம் இரவு நான்கு சாமப் பூசையுடன் மகா சிவராத்திரி உற்சவம் சிறப்பாக இடம்பெறும்.

மறுநாள் புதன்கிழமை காலை 6 மணிக்கு கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-06 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

#SrilankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version