செய்திகள்

உக்ரேனுக்கு ரஸ்யா 48 மணித்தியால காலக்கெடு!!

Published

on

உக்ரேன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் துருப்புகளை நிறுத்தியிருப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கே பேச்சுக்கு வருமாறு உக்ரேன் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் Dmytro Kuleba உத்தியோகபூர்வமாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். மேற்குலக நாடுகள் ரஷ்யா எந்நேரமும் வான் தாக்குதலுடன் உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என எச்சரித்துள்ள நிலையில் ரஷ்யா இதனை மறுத்துள்ளது.

பன்னிரண்டுக்கு மேற்பட்ட நாடுகள் தமது பிரஜைகளை உக்ரேனிலிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளதுடன் தமது தூதரகங்களையும் தலைநகரில் இருந்து வேறிடங்களுக்கு மாற்றியுள்ளன.

ரஷ்யாவுக்கு உக்ரேனை ஆக்கிரமிக்கும் நோக்கமில்லா விட்டால் வான் பாதுகாப்பை ரஷ்யா உறுதிப்படுத்த வேண்டும் அத்துடன் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டுமென உக்ரேன் கூறியுள்ளது.

உக்ரேன் ஜனாதிபதி ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிக்கும் என்பதற்கான எந்தவித ஆதரமுமில்லையென தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyக்குமிடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிக்கும் பட்சத்தில் அமெரிக்கா உக்ரேனுக்கு தோள் கொடுக்கும் என பைடன் தெரிவித்துள்ளார். உக்ரேன் ஜனாதிபதி பைடனின் கூற்றுக்கு நண்றி தெரிவித்துள்ளார்.

#WorldNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version