செய்திகள்

பொறுப்புகூறும் விதத்தில் நிதி அமைச்சர் செயற்படுவதில்லை! – லக்‌ஷ்மன் கிரியல்ல குற்றச்சாட்டு

Published

on

” நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் இருக்கின்றது. ஆனாலும், அதிஉயர் சபைக்கு பொறுப்புகூறும் விதத்தில் நிதி அமைச்சர் செயற்படுவதில்லை. இதனால் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தெரியாதுள்ளது.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் நிலைவரம் தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இரு நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது. எனவே, அதற்கான திகதி கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும்.

உண்மையாலுமே நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் இருகக்கின்றது. எனினும், நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு எதனையும் தெரியப்படுத்துவதில்லை. இதனால் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது எமக்கும் தெரியாமல் உள்ளது.

அரசால் தற்போது முன்வைக்கப்பட்டுவரும் தர்க்கங்கள் போலியானவை என்பதை அமைச்சர் கம்மன்பிலவின் கூற்று உறுதிப்படுத்தியது. இந்த நெருக்கடி நிலைமைக்கு கொரோனா பெருந்தொற்று காரணமல்ல என்பதை அவர் விபரித்திருந்தார். உண்மை நிலைவரத்தை நிதி அமைச்சர் தெளிவுபடுத்துவதில்லை.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version