செய்திகள்

மருந்துகளுக்கு தட்டுப்பாடு! – ஒத்துக்கொண்டது அரசு

Published

on

நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கூற்றை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் முற்றாக நிராகரித்தார்.

நாட்டில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது உண்மை என குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் டொலர் தட்டுப்பாடு காரணமாக, அதற்கான தாமதம் ஏற்படுவதாகவும் அடுத்த வாரத்தில் அந்த மருந்துகள் நாட்டுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசானது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் தட்டுப்பாடான மருந்துகளை இன்னும் ஒரு வாரத்தில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றல் செயற்பாடுகள், குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.

அத்தகைய பிரசாரங்களில் எந்தவித உண்மையும் கிடையாது.

தடுப்பூசியினால் நோய்கள் ஏற்படுவதாக விஞ்ஞான ரீதியாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை நாம் பொறுப்புடன் குறிப்பிடுகிறோம்.

அதேவேளை பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நாட்டில் என்ரிஜனுக்கான பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். உண்மையில் என்ரிஜனுக்கான சிறு அளவிலான தட்டுப்பாடு நிலவியது. அது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மேலும் 4 இலட்சம் என்ரிஜன்கள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளன.

தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்திலும் பலர் அது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர். எவ்வாறாயினும் அழிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் மீளப் பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மருந்து விலையேற்றம் தொடர்பான தரவுகள் அளிக்கப்பட்டுள்ளதாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

அது தொடர்பான விசாரணைகளை தற்போது குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் உண்மை நிலை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version