செய்திகள்

74ஆவது சுதந்திர தின அணிவகுப்பு! – 6,500 பேர் பங்கேற்பு

Published

on

இலங்கையின் 74ஆவது சுதந்திர தின அணிவகுப்பில் ஆயுதப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கெடட் படையைச் சேர்ந்த 6,500 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக செயலாளர் நாயகம் (ஓய்வு பெற்ற) கமால் குணரத்ன தெரிவித்தார்.

74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று (31) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கமால் குணரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

3463 இராணுவத்தினர், 919 கடற்படையினர், 804 பேர் விமானப்படை உறுப்பினர்கள், 336 பொலிஸ் உறுப்பினர்கள், 282 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், 437 சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் 259 தேசிய கெடட் படை உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த அணிவகுப்பில் கலாசார வைபவமும் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
சுதந்திர தின அணிவகுப்பில் 111 கவச வாகனங்களும் உள்ளடக்கப்பட்டதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

74 ஆவது சுதந்திர தின அஞ்சலி நிகழ்வு நண்பகல் 12.00 மணிக்கு காலி முகத்திடலுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் கடற்படையின் கஜபாகு கப்பலில் இருந்து நடாத்தப்படவுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மைதானத்திற்கு மேலே வானத்திலிருந்து 26 போர் விமானங்கள் மற்றும் 50 விமானிகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version