செய்திகள்

அமெரிக்காவில் அவசரகால நிலை பிரகடனம்!!

Published

on

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நீயுயோர்க்மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நீயுயோர்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்து 17 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை.

கடலோரப் பகுதிகளில் ஒரு அடி உயரம் பனிப்பொழிவு காணப்படுவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனி அகற்றும் வாகனங்கள் சாலைகளில் செல்வதைப் பார்க்க முடிந்ததுசேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பல பகுதிகளில் வாகனங்கள் பனி மூடி காணப்பட்டுள்ளன.

லாங் ஐலேண்ட் பகுதியில் ஒரு பெண் பனியில் உறைந்த நிலையில் தனது காரில் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும் பிரயாணங்களை தவிர்க்குமாறும் மாநில போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மன்ஹாட்டன் வடக்கே தீவுப் பகுதியில் 25 சென்டி மீட்டர் அளவிற்கு பனி உயர்ந்துள்ளது. ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் தண்டவாளத்திலிருந்து பனியை அகற்றும் நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version