செய்திகள்

கனடா – அமெரிக்கா எல்லையில் திடீர் பதற்றம்!!

Published

on

கனடா-அமெரிக்கா இடையிலான எல்லையைக் கடப்பதற்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்ற அறிவிப்புக்கு எதிராக வாகன சாரதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கனடா-அமெரிக்கா இடையிலான எல்லையைக் கடப்பதற்குத், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்று அரசின் அறிவிப்பிற்கெதிராக கனடாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கனரக வாகன சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என தங்களை அழைத்துக்கொள்ளும் அவர்களுக்கு, அண்மைய நாட்களாகவே ஆதரவு அதிகரித்துவரும் நிலையில், இவ்வார இறுதியில் கனேடியத் தலைநகர் ஒட்டாவாவின் மத்திய பகுதியில் போராட்டம் நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளன்னர்.

அமெரிக்கா – கனடா இடையிலான எல்லையைக் கடப்பதற்கு ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து கனரக வாகன சாரதிகள் கட்டாயம் கொவிட் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்ற நடைமுறையினை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இருநாடுகளுமே நடைமுறைப்படுத்தியிருந்தன.

இருநாட்டு அரசின் அறிவிப்பிற்கெதிராக முன்னெடுக்கவுள்ள வாரயிறுதிப் போராட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் இதுவரை வெளியாவில்லை.

இப்போராட்டமானது மிகப்பெரிய போக்குவரத்து பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படுத்துமென அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் இதுவரையில் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version