செய்திகள்
முதலில் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் செல்லுங்கள்! – அரசுக்கு தொழிற்சங்கத் தலைவர் பதிலடி
எரிபொருள் நெருக்கடியினை முகாமைத்தும் செய்ய பொதுமக்கள் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதற்கு முன்னர் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் செல்ல வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு மீள்நிரப்பல் (ரீலோட்) முறைமையில் எரிபொருளை 3 நாட்களுக்கு தேவையான அளவில் விநியோகிக்கிறது. எதிர்வரும் நாட்களில் மின்விநியோகம் தடைப்படும் என்பதை அரசாங்கம் மறைமுகமாக குறிப்பிட்டு வருகிறது.
பொதுப் பயணிகள் துவிச்சக்கர வண்டியை பாவித்தால் எரிபொருள் நெருக்கடியினை முகாமைத்துவம் செய்யலாம். உடலுக்கும்,சுற்று சூழலுக்கும் ஆரோக்கியமானது என சுற்றாடற்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
பொதுப் பயணிகள் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்த முன்னர் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் பாராளுமன்றிற்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் துவிச்சக்கர வண்டியில் செல்ல வேண்டும். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பாவனைக்கு அதிகளவில் எரிபொருள் செலவாகுகிறது.
நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்க முன் அரசியல்வாதிகள் அனைவரும் மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துவிச்சக்கர வண்டியில் பாராளுமன்றம் செல்ல முடியாவிடின் புகையிரதம், அரச மற்றும் தனியார் பேருந்துகளை பயன்படுத்த முடியும்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினர்கள் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் சென்றார்கள். தற்போதும் செல்லலாம் – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login