செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசியின் சோதனை இந்தியாவில்!!

Published

on

பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸாக நாசி வழியாக செலுத்தும் மருந்தினை அளித்து சோதனையினை மேற்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையகத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் பேரிடம் நடாத்தப்படவுள்ள இந்த சோதனை, இந்தியாவின் 9 இடங்களில் நடத்தப்படவுள்ளது.

அதேவேளை, 2ஆவது டோஸ் தடுப்பூசிக்கும் நாசி வழியாக செலுத்தும் பூஸ்டர் டோஸிற்கு இடையிலான இடைவெளி 6 மாதமாக நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பரிசோதனைகளின் நிறைவில் மார்ச் மாதத்தில் இதனை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version