செய்திகள்

சீனா ஒலிம்பிக்கில் தாய்வான் விவகாரம் எதிரொலிக்கலாம்!!

Published

on

சீனா- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டியில் தாய்வான் விவகாரம் எதிரொலிக்கலாம் என்பதால், அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

சீனாவில்- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதவேளை தாய்வான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகின்றமையால், இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் எதிரொலிக்கும் என சீனா கருதுகின்றது.

ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 20ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், தாய்வான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் .

சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version