செய்திகள்

ரஷ்ய அதிபர் புடின் மீது பொருளாதார தடை விதிக்கும் பைடன்!!

Published

on

தற்காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த அரச தலைவராக கருதப்படுகின்ற ரஷ்யா அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் பொருளாதாரத் தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா எல்லை மோதலாலேயே குறித்த தடை விதிக்கப்பட இருப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார் . இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பு உக்ரைனை தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகின்றது.

ஆனால் ரஷ்யா தனது எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் தேசிய பாதுகாப்புக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதுகின்றது.

எனவே உக்ரைனை தங்களது அமைப்பில் நினைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும். இதற்கு நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்க உடன்படாததால் இருதரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகின்றது.

இந்தச் சூழலில் உக்ரைன் எல்லை அருகே சுமார் ஒரு லட்சம் படையினரை ரஷ்யா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷ்ய படை குவித்துள்ளதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறைத்தாலும் நாளுக்கு நாள் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்றது .

இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அப்போது ஒரு பத்திரிகையாளர் மீது படையெடுப்பு விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடின் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதார தடைகள் விதிக்கப் படுமா எனக் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஜோ பைடன் உக்ரைனுக்குள் ரஷ்யா ஒரு துளியேனும் ஊடுருவினால் நிச்சயமாக புடின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்றார்.

#Worldnews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version