செய்திகள்

120 ரூபாவுக்கு குறைவாக நாம் நெல்லை விற்கமாட்டோம் – விவசாயிகள்!!

Published

on

ஒரு கிலோகிராம் நெல்லை 120 ரூபாய்க்கு குறைவாக வழங்குவதற்கு தாம் தயாராக இல்லை என, விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இரண்டு சிறுநீரகங்களையும் காப்பாற்ற இயற்கை உரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்திய அரசாங்கம், தற்போது வெளிநாடுகளிலில் இருந்து காபனிக் உரத்தை பயன்படுத்தி விளைந்த அரிசியையா? இறக்குமதி செய்கிறது.

இவ்வாறு பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜகத் அருண கீர்த்தி விசனம் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

காபனிக் உர பயன்பாடு காரணமாக இன்று விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விளைச்சல்கள் 40 – 50 சதவீதமாக குறைவடைந்துள்ளன. ஏனைய மாவட்டங்களில் நெல்விளைச்சல் 60 சதவீதமாக குறைந்துள்ளது.

இதற்கு மாற்றீடாக விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 40 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த கூறுகிறார்.

ஆனால், அமைச்சரின் கருத்து தொடர்பில் மீண்டும் மீண்டும் கவனம் செலுத்துமாறு நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜகத் அருண கீர்த்தி தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version