செய்திகள்

பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! – விசாரணைகள் தீவிரம்

Published

on

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் புதைக்கப்பட்ட மேலும் 90 பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் ‘கலாசார இனப்படுகொலை’ வரலாற்றை பறைசாற்றும் நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள், 90 இற்கும் மேற்பட்ட ‘சாத்தியமான’ கல்லறைகள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் உறைவிடப் பாடசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் சுமார் 800 பழங்குடி மக்களைக் கொண்ட வில்லியம்ஸ் லேக் ஃபர்ஸ்ட் நேஷன், செயின்ட் ஜோசப் மிஷன் ரெசிடென்ஷியல் பாடசாலையில் புவி இயற்பியல் தேடலின் முதற்கட்டமாக ‘மனித கல்லறைகளின்’ குணாதிசயங்களைக் கொண்ட 93 உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 4,000 முதல் 6,000 குழந்தைகள் காணாமல் போனதாக அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், முன்னாள் உறைவிடப் பாடசாலை குறித்து கனடா முழுவதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் ஏறத்தாழ ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பழங்குடியின குழந்தைகள் 1800 ஆம் ஆண்டிற்குப் பின்னர், குறிப்பாக 1990 ஆண்டு வரை கனடா முழுவதும் 139 குடியிருப்புப் பாடசாலையில்இ தங்கள் குடும்பங்கள், மொழிகள் மற்றும் கலாசாரங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தனிமைப்பட்டுத்தப்பட்டவர்கள் தாய்மொழிகளை விட்டு வெளியேறி, ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி பேசும் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய நிர்பந்தம் இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version