செய்திகள்

உக்ரைன் மோதல் – ரஷ்யா அமெரிக்காவுக்கு இடையிலானதா?

Published

on

உக்ரைனில் ரஷ்ய – உக்ரைன் எல்லை பிரச்சனை தற்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான மோதலாக மாறியுள்ளதாக வெளிநாட்டு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை அண்மைய நாட்களாக குவித்து வருகின்றது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.

அதேபோல இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

அப்படி நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அயர்லாந்து நாட்டின் கடற்கரைக்கு 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் ரஷ்ய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கு அயர்லாந்து தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அயர்லாந்துக்கு ஆதரவாக கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்திற்கு கூடுதல் படைகளை அனுப்பி வருகின்றது.

அங்கு தங்களது படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள நேட்டோ பால்டிக் கடல் பிராந்தியத்தில் கூடுதல் படைகள் மற்றும் போர் தளவாடங்கள், போர் கப்பல்கள் என்பவற்றினையும் அனுப்பியுள்ளது.

இதேவேளை அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ படையில் உள்ள டென்மார்க் நவீன போர் விமானங்களை சோனியாவுக்கு அனுப்புகின்றது. ஸ்பெயின் நாடு பல்கேரியாவுக்கு போர்க்கப்பல்கள் விமானங்களை அனுப்புகின்றது.

அதேபோல பிரான்ஸ் தனது கூடுதல் படைகளை அனுப்ப தயார் நிலையில் வைத்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளை விரிவுபடுத்த கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தும் நிலையில் அங்கு நேட்டோவின் கப்பல்கள் விரைந்துள்ளமை சர்வதேச நாடுகள் மத்தியில் போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

#WorldNews


You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version