செய்திகள்

சைக்கிளில் பணிக்கு வந்தால் பதவி உயர்வு! – மஹிந்த அமரவீர

Published

on

சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சைக்கிளில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், நேர விரயத்தைத் தடுக்கவும் இது உதவுவதுடன், தொற்று நோய்களையும் கட்டுப்படுத்தும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சைக்கிள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது வாகனம் ஒன்றிற்கு கிலோமீற்றருக்கு ரூ.103.56 அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சைக்கிளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோமீற்றருக்கு 236 ரூபாவை மிச்சப்படுத்த முடியும் எனவும் அரசாங்கத்திற்கு இதன்மூலம் 339 ரூபா இலாபத்தை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SrilankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version