செய்திகள்

மினிவேன் வெடிகுண்டு – 7 பேர் உடல் சிதறி பலி!!

Published

on

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் மினிவேன் மூலம் நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

குறித்த வெடிகுண்டு வேனின் எரிபொருள் தொட்டியில் பொருத்தப்பட்டதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாகாண மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபானின் ஆட்சி அதிகாரத்திற்கு பின் ஐ.எஸ் அமைப்பு குண்டு தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

#World

1 Comment

  1. Pingback: தெற்கு செர்பியாவில் 1000 கிலோ நிறை கொண்ட வெடி குண்டு மீட்பு - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version