செய்திகள்

நெடுஞ்சாலைகளால் உயிர் பல்வகைமை பாதிப்பு!

Published

on

நெடுஞ்சாலைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் சூழல் மாசடைதல் காரணமாக  உயிர்பல்வகைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பறவைகள் உட்பட 500,000 ற்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் சமீபத்திய ஆண்டுகளில் இறந்துள்ளதாக  சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

நெடுஞ்சாலைகளில் வாகனங்கள்  மோதுவதனாலும்  வாகனங்களிலிருந்து வெளியேறும்  மாசுகளாலும் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிடம்  வினவியபோது, ​​

அதிவேக நெடுஞ்சாலைகளில்  சில  வனவிலங்குகளால் பிரச்சினைகள் ஏற்படுவதை ஒப்புக்கொள்கின்றேன்.

இந்நிலையைக் கருத்திற் கொண்டு, அதிவேக நெடுஞ்சாலைகளின்  இருபுறங்களிலும் பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயன்படுத்தும் மரங்களை வளர்க்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சாலையின் இருபுறமும் விலங்குகளை ஈர்க்கும் மரங்கள் வளர்வதைத் தடுக்க அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக மயில்களின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் மக்களை எச்சரிக்கும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில வனவிலங்குகள் நெடுஞ்சாலைகளுக்கு வெளியே இறந்து பல்வேறு இடங்களில் கிடப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

#SriLankaNews

1 Comment

  1. Pingback: ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version