செய்திகள்

இரசாயன உரங்களுக்கு மானியம்!

Published

on

இரசாயன உரங்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள்  மானியம் வழங்குவதற்கு அல்லது விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

காலி, நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது உலக சந்தையில் உரங்கள் மட்டுமின்றி எரிபொருள், பால்மா, சீமெந்து, உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் உற்பத்திப் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் உலகளாவிய ரீதியில் எமது நாட்டிலும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. உலகில் எந்த அரசும் தனது ஆட்சியில் பொருட்களின் விலையை அதிகரித்து மக்களை வரிசையில் நிற்க வைக்க விரும்புவதில்லை.

இந்த ஆண்டு பெருந்தோட்டத்துறை மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நிறைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இரசாயன உரங்கள் மீதான தடை நல்ல நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது, ஆனால் தேயிலை தொழிற்துறை உட்பட ஏனைய துறைகளுக்கு அதை தாங்க முடியவில்லை. ஆனால் தற்போது இரசாயன உரங்கள் பெறப்படுகின்றன.

ஆனால் 50 கிலோ உர மூட்டை ரூ.7,200 வாக காணப்படுகின்றது. அதை மக்களால் வாங்க முடியாது. எனவே  உடனடியாக நிவாரணம் வழங்க முடியாவிட்டாலும், முறையாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் உரத்திற்கான மானியத்தினை வழங்குவோம்.  அதுமட்டுமின்றி உர விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேயிலை தொழிற்துறை 2020 ஆம் ஆண்டளவில் 279 மில்லியன் கிலோகிராம் வளர்ச்சியைக் காட்டியது.  ஆனால் உர நெருக்கடி இருந்த போதிலும் கடந்த வருடம் 305 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி கிடைத்துள்ளது.

தேயிலை பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எதிர்காலத்தில் பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.  தேயிலை பயிரிட விரும்பும் எவருக்கும் வசதிகள் செய்து தரப்படும்.

தேயிலை செடிகள் மற்றும் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அதிக நிழல் தரும் செடிகள், குட்டை நிழல் செடிகள், டொலமைட் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாகவும்  அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version