செய்திகள்

வௌிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட ஐவர் கைது!

Published

on

டுபாய்க்கு சுமார் 42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட கடத்தல்காரர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று (20) கைது செய்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் பிரபல வௌிநாட்டு நாணய கடத்தல்காரர்கள் என தெரியவருகின்றது.

இதில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் அடங்குவர். சந்தேகநபர்கள் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

வெளிநாட்டு நாணயங்களில் 22,300 அமெரிக்க டொலர்கள், 63,500 யூரோக்கள், 292,000 சவுதி ரியால்கள், 8,725 பவுண்டுகள் ஸ்டெர்லிங் மற்றும் 75,000 திர்ஹாம்கள் இருந்ததாக சுங்கத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து அவர்களிடமிருந்த பயணப்பொதிகளை சோதனையிட்ட போதே மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு நாணயங்களை சுங்க அதிகாரிகள்  கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் மற்றும்  கடத்தல்காரர்கள் தொடர்பில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version