செய்திகள்

வடகொரிய அதிகாரிகளைச் சீண்டிய அமெரிக்கா: கடும் சீற்றத்தில் வடகொரியா

Published

on

அமெரிக்கா கடும் விளைவை சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஏவுகணைச் சோதனையை நடாத்தியமை தொடர்பில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள வடகொரியா, அமெரிக்கா கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது.

ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.

இதனைப் பின்னணியாக க் க கொண்டு அமெரிக்க நிர்வாகம் வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

அமெரிக்க அதிகார வரம்புக்குள் இருக்கிற இந்த 5 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version