செய்திகள்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது

Published

on

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,56,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில்இ 20,911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,56,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 20,911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 17,934 ஆக இருந்த நிலையில் இன்று 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 68 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு விகிதம் 13.4 சதவீதமாக உள்ளது.

சென்னையில் தினசரி பாதிப்பானது 8000-ஐ தாண்டியது. இன்று 8218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 2030 பேருக்கும், கோவையில் 1162 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 502 பேருக்கும், கன்னியாகுமரியில் 538 பேருக்கும், திருவள்ளூரில் 901 பேருக்கும், மதுரையில் 599 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 6,235 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 27 ஆயிரத்து 960 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,930 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,03,610 ஆக உயர்ந்துள்ளது.

#IndiaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version