செய்திகள்

அப்பம் சாப்பிட்டுவிட்டு துரோகம் இழைத்தவர்களே சுதந்திரக்கட்சியினர்! – சாடுகிறார் திலும் அமுனுகம

Published

on

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசுக்குள்ளும், அமைச்சரவையிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். கூட்டு பொறுப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் , வெளியேற்றுவதற்கு முன்னர் வெளியேறுவதே நல்லது.

இந்த அரசின் வெற்றியின் பிரதான பங்காளி சுதந்திரக்கட்சி அல்ல. அப்பம் சாப்பிட்டுவிட்டு துரோகம் இழைத்தவர்களே அங்குள்ளனர். எந்நேரத்தில் வேண்டுமானாலும் அக்கட்சியினர் துரோகம் இழைக்கலாம். எனவே, பாய்ந்து செல்வதற்கு முன்னர் வெளியேற்றுவதே நல்லது.” – என்றார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவர் பின்னாலும் செல்லாது, சுதந்திரக்கட்சி தலைமையில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version