செய்திகள்

சர்வதேசத்திடம் கையேந்த மாட்டோம்! – கூறுகிறார் பந்துல

Published

on

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைக்கு தேவையான டொலரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரிசிக்கான செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரிசியின் விலையை அதிகரிக்க சில தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மக்களின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்குமளவில் நம் சர்வதேசத்திடம் எப்போதும் செல்லத் தயாரில்லை.

நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நாம் தயாராகவே உள்ளோம். சதொச நிறுவனங்களின் மூலமாக தொடர்ந்து நிவாரணங்களை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version