செய்திகள்

2022ல் உலகை ஆளும் ஓமைக்ரான்!!

Published

on

எதிர்வரும் 2022 ஆண்டு உலகை தனது கைக்குள் ஓமைக்ரான் வைரஸ் போட்டுக்கொள்ளும் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஆரூடம் வெளியிட்டுள்ளனர்.

2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் துவங்கிய கொவிட் எனும் கொடிய வைரஸ் மெல்ல மெல்ல உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதில் பலரும் சிக்கியதுடன் பல இலட்சக்கணக்கான உயிர்களும் காவு கொள்ளப்பட்டன.

தற்போது கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி ஆட்கொண்டு வருகிறது.

இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருதுடன் இந்தியாவில் மட்டும் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு உலகம் முழுவதும் ஓமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும் என சிங்கப்பூரை சேர்ந்த ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மேலும், 2 மாதங்களில் உலகமெங்கும் 300 கோடி பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்படலாம் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதாரத்துறை நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொடிய கொரோனாவுக்கே தாக்குப்பிடிக்க முடியாத உலக நாடுகள் இந்த ஓமைக்ரான் வைரஸிற்கு எவ்வாறு தாக்குப்பிடிக்கப்போகின்றது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version