செய்திகள்

அணுவாயுத தடை உடன்பாட்டுக்கு இலங்கை ஆதரவு!

Published

on

அணுவாயுத பாவனைகளை தடை செய்வதற்கான உடன்பாட்டில் இலங்கையின் ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தத்திற்கு 122 நாடுகள் ஒத்துழைப்பு அளித்து சபையில் நிறைவேற்றப்பட்டது.

அணு ஆயுதமோ, வேறு அணுவாலான வெடிபொருட்களை தயாரித்தல், பரிசோதித்தல், நிர்மாணித்தல், உற்பத்தி செய்தல், பரிமாற்றுதல், தன்னகத்தே வைத்திருத்தல், களஞ்சியப்படுத்தல், அவற்றைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தல், தமது நிலப்பரப்பில் அவ்வாறான ஆயுதங்களை நிலைப்படுத்துவதற்கு இடமளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எவருக்கேனும் ஒத்துழைத்தல், ஊக்குவித்தல் அல்லது தூண்டுதல் போன்ற செயற்பாடுகள் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

இவ் ஒப்பந்தத்திற்கு வெளி விவகார அமைச்சர் முன்வைத்த  யோசனையை அங்கீகரிப்பதற்கான ஒத்துழைப்பை அமைச்சரவை  வழங்கியுள்ளது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version