செய்திகள்

பனாமா பேப்பர் ஊழல்: ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ்!!

Published

on

 பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளைப் பதுக்குவதற்கும், வாங்குவதற்கும் உதவி செய்வதுதான பொன்சேகா நிறுவனத்தின் பணியாகும்.

இந்த நிறுவனத்திலிருந்து ரகசிய ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் கடந்த 2016-ம் ஆண்டில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

 

உலகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கணக்கில் வராத சொத்துகளைப் பதுக்கியுள்ளார்கள் என்பது ஆவணங்கள் வாயிலாகத் தெரியவந்தது. ‘

இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இதற்கமைய,  பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பை அமலாகக்கப் பிரிவு அலுவலகத்தில் இன்று பிற்பகலில் ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராகக் கோரப்பட்டுள்ளது. ஆனால், தன்னால் இன்று ஆஜராக முடியாது, வேறு ஒருநாளில் ஆஜராகிறேன் என்று அமலாக்கப் பிரிவுக்கு ஐஸ்வர்யா ராய் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version