செய்திகள்

கோந்தைப்பிட்டி கடலில் மாயமான மீனவர்கள் சடலமாக மீட்பு!

Published

on

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த 02 வது மீனவரும் இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடலமானது தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் படகொன்றில் பயணித்துள்ளனர். இதன்போது, மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில் படகின் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மீனவர்கள் கோந்தை பிட்டி கடலில் தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர்.

இதன் போது படகில் வெளி இணைப்பு இயந்திரத்தை இணைந்து படகை செலுத்தி பார்த்துள்ளனர்.

குறித்த படகில் மீனவர்கள் உட்பட 8 பேர் இருந்துள்ளனர். படகின் வெளி இணைப்பு இயந்திரம் திடீரென இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து காற்றின் காரணமாக படகு கடலில் சென்று கொண்டிருந்துள்ளது.

இதன்போது படகின் முன் அணியத்தில் நின்ற ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்து கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றைய மீனவர் அவரைக் காப்பாற்ற கடலில் குதித்த நிலையிலேயே காணாமல் போயிருந்தார்.

எனினும் இருவரையும் மீட்க முடியவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் படகின் வெளி இணைப்பு இயந்திரம் இயங்கிய நிலையில் இவர்கள் கரை திரும்பி ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை காலை முதல் மீனவர்கள் கடலில் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன் போது கோந்தை பிட்டி கடலில் இருந்து சற்று தொலைவில் தர்ஷன் என்பவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றைய மீனவரை மீனவர்கள் தேடிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version