செய்திகள்

உரக் கலன்கள் வெடிப்புக்கு நைட்ரஜன் வாயு அதிகரிப்பே காரணம்!

Published

on

கமநல சேவைகள் மூலம் வழங்கப்பட்ட நான்கைந்து உரக் கலன்கள் வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.

இதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,

நைட்ரஜன் வாயு அதிகரித்தமையே இவ் உரக் கலன் வெடிப்பு நிகழ்ந்ததற்கு காரணம் என தெரிவித்தார்.

அத்தோடு 800,000 தரமான உரக் கலன்கள் வழங்கப்பட்ட நிலையில் நான்கைந்து வெடித்து சிதறியது பற்றி பேசுவதில் நியாயமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த வெடித்த உர கலன்களில் மீன் கழிவுகள் கொண்டு தயாரிக்கப்பட்டதைப் போன்று துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இக்கருத்துக்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மீன் சார்ந்த உரத்தை விவசாயிகள் நீண்ட காலமாக பயன்படுத்தி வருவதாக ஞாபகமூட்டினார்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version