செய்திகள்

பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானுக்குள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி!

Published

on

பாகிஸ்தான் பலத்த பாதுகாப்புடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை வரவேற்றுள்ளது.

மூன்று இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் துடுப்பட்ட தொடர்களில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் தடவையாகும்.

நியூசிலாந்து அணி மூன்று மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி தனது பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்து போட்டியில் பங்கேற்காமல் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் சென்றடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியினர், கராச்சி விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விடுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் எதிர்வரும் 13, 14, 16 ஆம் திகதிகளில் இருபதுக்கு 20 போட்டிகளும் 18, 20, 22 ஆகிய திகதிகளிலும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மேற்கிந்திய தீவின் அணித்தலைவர் கைரன் பொல்லார்ட், பொபியன் அலென், ஒபெட் மெக்காய் ஆகியோர் காயம் காரணமாகவும், இவின் லீவிஸ், ஹெட்மயர், அண்ட்ரே ரஸல், சிமோன்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணத்தினாலும் இந்த போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் தலைவர் ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சிரேஷ்ட வீரர்கள் இல்லாமல் இந்த தொடரில் பங்குபெறுவதாக மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது.

இருபதுக்கு 20 அணியின் தலைவராக நிகோலஸ் பூரனும், ஒருநாள் சர்வதேச அணியின் தலைவராக ஷாய் ஹோப்பும் அணியை வழி நடத்துவார்களென மேற்கிந்திய தீவின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு கிரிக்கட் போட்டிகளில் எப்பிரச்சனைகளும் வாராது என பாகிஸ்தானின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

#sports

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version