இந்தியா
ஷேர் ஆட்டோ மீது பாரவூர்தி மோதியதில் ஆற்றில் விழுந்த பயணிகள்
ஆந்திராவில் ஷேர் ஆட்டோ மீது எதிரே வந்த பாரவூர்தி மோதியதில் ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆத்மகூரில் இருந்து பீரபேரு அருகே உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக, நேற்று (08) இரவு 12 பேர் ஷேர் ஆட்டோவில், தரைப்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், எதிரே வந்த பாரவூர்த்தி குறித்த ஷேர் ஆட்டோ மீது மோதியதில், நிலை குலைந்த ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்து, அதில் பயணித்தவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
அவ்வழியாகப் பயணித்தவர்கள் 7 பேரை மீட்ட நிலையில், மாயமான ஐவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
#IndiaNews
You must be logged in to post a comment Login