செய்திகள்

கிண்ணியா படகு விபத்து – தவிசாளருக்கு பிணை!!

Published

on

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகரசபைத்தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த நவம்பர் 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் படகுப்பாதை கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பிணைஉத்தரவு வழங்கப்பட்டது.

படகுப்பாதை விபத்தில் கிண்ணியா பொலிஸாரினால் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் நான்காவது சந்தேகநபராக கிண்ணியா நகர சபைத் தவிசாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (10) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தவிசாளர் சுகவீனமுற்ற நிலையில் அதற்கான மருந்துகளைப் பயன்படுத்தி வருவதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரான கிண்ணியா நகர சபைத் தவிசாளரை பிணையில் விடுவிக்குமாறும், எதிர்வரும் 16ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் பயாஸ் ரசாக் உத்தரவிட்டார்.
#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version