செய்திகள்

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இந்தியப் பெண்மணி!

Published

on

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இந்தியப் பெண்மணி பதவி ஏற்கவுள்ளார்.

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகதத்தின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் அப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் தலைவர் ஆவார்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர் அமெரிக்காவில் 1986-ம் ஆண்டு தனது மேற்படிப்பை கற்றவர்.

தற்போது, கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்துதல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

அத்தோடு நீலி பெண்டாபுடி, கல்வித்துறையில் ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று பென்சில்வேனியா மாநில அறங்காவலர் குழுவால் அவர் ஒருமனதாக அம்மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அடுத்த ஆண்டு பதவி ஏற்பார் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version