செய்திகள்

ஆயுத விற்பனையில் முன்னணி பெறும் இந்திய நிறுவனங்கள்!!

Published

on

ஏச்ஏஎல் உட்பட 3 இந்திய நிறுவனங்கள் ஆயுதங்களை விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கும் 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் 2020-ம் ஆண்டில் ஆயுதங்களை விற்பனை செய்த 100 முன்னணிநிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய ஆர்டினன்ஸ் ஆலைகள் (ஐஓஎப்), பாரத்எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) ஆகிய 3 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இப் பட்டியலில் ஏச்ஏஎல்  நிறுவனம் 42-வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 297 கோடி டாலருக்கு ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது.

இந்திய ஆர்டினன்ஸ் தொழிற்சாலை 60-வது இடத்தில் உள்ளது.இந்நிறுவனம் 190 கோடி டாலருக்குஆயுதங்கள் சப்ளை செய்துள்ளது.

பிஇஎல் 66-வது இடத்தில் உள்ளது. இது 163 கோடி டாலர் அளவுக்கு சப்ளை செய்துள்ளது. இது முந் ைய ஆண்டைவிட 4% அதிகம்.

ஆயுத உற்பத்தி நாடுகளில் மிகக் அதிகளவில் விற்பனை செய்யும் நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version