செய்திகள்

வைரஸை கொல்லும் ‘சுவிங்கம்’! – அமெரிக்க விஞ்ஞானிகள்…

Published

on

உலகை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸை கொல்லும் “சுவிங்கம்” ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் ஆய்வதிகாரி ஹென்றி டேனியல் Hentry Deniell  என்பவரே இதனை தெரியப்படுத்தியுள்ளார்.

 

கொரோனா வைரஸ், மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பெருக்கமடைகிறது. இந்தநிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர், தும்மும்போது, இருமும்போது, பேசும்போது வைரஸ் அவர் வாயிலிருந்து வெளியேறி மற்றவர்களை அடையக்கூடும்.

ஹென்றி டேனியல் குறிப்பிடும்போது, புதிய சுவிங்கம், கொரோனா வைரஸ் உருவாகும் இடத்திலேயே அதனை அழித்து விடும் என்கிறார்.

இதற்காக, தாவரத்தில் இருந்து பெறப்படும் ‘ஏசிஇ2’ ACE2 என்ற புரதம் பயன்படுத்தப்படுகிறது.

இச்சுவிங்கம் பரிசோதனையில் நல்ல விளைவுகளை தருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version