செய்திகள்

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே பொது இடங்களுக்கு அனுமதி

Published

on

பொது இடங்களுக்கு செல்லும் போது கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.

மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களுக்கு செல்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக்கான தடுப்பூசி சான்றிதழை சரி காட்ட வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், அங்காடிகள், தங்கும் விடுதி, உணவகம், நியாய விலைக்கடை, மதுபானசாலை மற்றும் சந்தை என 18 இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

#IndiaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version