செய்திகள்

சம்பிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு முகவரா ?

Published

on

சம்பிக்க ரணவக்க வடபகுதிக்கு விஜயம் செய்து பல முக்கியஸ்தர்களுடனும் மக்களுடனும் கலந்துரையாடி வருகின்றார்.

இந்த நிலையில் இன்று(05) கிளிநொச்சிக்கு விஜயம் செய்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராது அனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும் செயற்படுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரதேசம் யுத்த காலத்திலும், அதற்கு பின்னரான காலத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்த பிரதேசமாக இருக்கின்றது. 10 ஆண்டுகளிற்கு பினரும் இவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ன நிலைப்பாடு இருக்கின்றது.

உள்ளக வீதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதேவேளை கொவிட் நிலை காரணமாக மிகவும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான பிரதேசங்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டி உள்ளது.

இனம், மதம், சமயம் என்ன விரச்சினைகளிற்கு அப்பால், அனைத்து இல்ஙகை மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் காஸ், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு நாட்டு மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இதுவரை தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறவில்லை. ஆயினும், பாராளுமன்றில் சாதாரணமாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும், ஒட்டுமொத்தமாக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் ஒன்றாக செயற்படுகின்றோம்.

பிரதேசவாதங்களை களைந்து அனைத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் ஒன்றாக செயற்படுகின்றோம் என அவர் தெரிவித்திருந்தார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version