செய்திகள்

பெண்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் – மெட்டா பேஸ்புக்!

Published

on

மெட்டா பேஸ்புக் சமூக வலைதளத்தில்  பெண்களின் பாதுகாப்பிற்கான பல அம்சங்களை தன்வசம் கொண்டுள்ளது என மெட்டா  STOPNCll.ORG அறிவித்துள்ளது. இவ் மெட்டா விசேடமாக பெண்களுக்கான  பாதுகாப்பு மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இது ஒட்டுமொத்த அந்தரங்க புகைப்படங்கள் வைரலாக்குவதை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை மொத்தமாக 14 மொழி பிரயோகத்தினை கொண்டு பயன்படுத்தலாம். மேலும், பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும்! எவ்வாறு பாதுகாப்பான முறையில் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும்! என்பதற்கான குறிப்புக்களையும் இம் மொழிகள் ஊடாக துல்லியமாக வழங்கியுள்ளது.பெண்கள் எந்த மொழி பிரச்சினையையும் சந்திக்கமால் இருப்பதை உறுதி செய்துள்ளது

மேலும் இதில் பயனர் பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு பயனர் பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய பல கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் புகைப்படங்கள் வைரலாகுவதையும், பகிர்வதையம் தடை செய்வதாகும்.

அதாவது புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டதுடன் பேஸ்புக்கின் தானியங்கி அதை ஸ்கேன் செய்யும், அத்தோடு மெட்டா தனது தளத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவததற்காக ஆராய்ச்சி மையம் Red Dot Foundation  ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து இந்நடவடிக்ககைகளை மேற்கொள்கின்றது.

ஆகவே பெண்களை பொறுத்த மட்டில்: சமூக வலைத்தளம் என்பது தமது புகைப்படங்களை தவறாக பயன் படுத்துகின்ற ஓர் கருவி மட்டுமே என்கிற அச்ச நிலை தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. ஆகவே, அதனை தவிர்க்கும் நோக்கத்துடனே இவ் மெட்டா உருவாக்கப்பட்டுள்ளது.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version