செய்திகள்

இரு மடங்காகும் கொரோனா!!

Published

on

தென் ஆபிரிக்காவில்  கொரோனா  தொற்று ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் உருமாறிய  கொரோனா  வைரஸான ஒமைரோன் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

ஒமைரோன் வைரஸ் ஏற்கெனவே  கொரோனா  பாதிப்பில் இருந்து மீண்டவர்களை எளிதில்தாக்கும் என உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்  கொரோனா  தொற்று ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அங்கு  கொரோனா  பாதிப்பு 4,373 என்று இருந்த நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் 8,561 ஆக அதிகரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மண்டல மருத்துவ நிபுணர் நிக்ஸி குமேட்-மொலெட்ஸி தெரிவிக்கையில்,  தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் மாத ஆரம்பத்தில் 7 நாள் சராசரியாக ஒரு நாளைக்கு 200 என்ற அளவில் இருந்த  கொரோனா  பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. ‘வரும் காலங்களில் ஒமைரோன் பாதிப்பு இரண்டு அல்லது மும்மடங்காக இருப்பதைப் பார்க்கப் போகிறோம் என்று எச்சரித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் ஏற்கெனவே 90,000 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version