செய்திகள்

புதிய வைரஸுக்கான பெயரில் “ஜி” எனும் எழுத்து நீக்கப்பட்டமைக்கான காரணம் இதோ!

Published

on

2021 நவம்பர் மாதம் 26ஆம் திகதி “ஜி” என்கிற கிரேக்க எழுத்தை கொண்டு புதிய வைரசுக்கு பெயர் சூட்டுவதற்கான ஆய்வு உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஆய்விற்கு பின்னராக “ஜி” என்ற கிரேக்க எழுத்தை உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் நிராகரித்து விட்டனர்.

பொதுவாக வைரஸ் ரகங்களுக்கு கிரேக்க எழுத்துக்களால் பெயர் சூட்டப்படுவது வழக்கம். குறிப்பாக கொரோனாவின் தீவிர ரகமான “டெல்டா” என்கிற பெயரும் கிரேக்க எழுத்துக்களில் இருந்தே தோற்றுவிக்கப்பட்டது.

அடுத்ததாக தற்போது புதிதாக தோன்றியிருக்கும் கொரோனா வைரசுக்கு பெயர் சூட்டுவதற்கான முயற்சி உலக சுகாதார அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது.

முதலில் ‘நூ’ என இந்த புதிய ரகத்துக்கு பெயர் சூட்ட திட்டமிட்டனர். ஆனால் அந்த எழுத்து ஆங்கில வார்த்தையான “நியூ” என்ற வார்த்தையுடன் இணைவதால் குழப்பம் ஏற்பட்டு நிராகரிக்கப்பட்டது.

இதில் “நூ” என்ற எழுத்திற்கு ஆங்கிலத்தில் நிர்வாணம் என்ற பொருளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்ததாக “ஜி” என்கிற கிரேக்க எழுத்தை கொண்டு இப் புதிய வைரசுக்கான பெயர் சூட்ட பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அது சீன அதிபர் “ஜி ஜிங்பிங்” பெயரை குறிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் இந்த எழுத்தை தவிர்த்து விட்டனர்.

எனவே கிரேக்கத்தில் “ஜி” என்ற எழுத்திற்கு அடுத்ததாக வரும் எழுத்து பயன்படுத்தப்பட்டு ஓமிக்ரோன் என பெயர் சூட்டப்பட்டது.

இதனால் சமூக வலைத்தளங்கள் “ஜி” எனும் எழுத்தினை நிராகரித்தமையால் உலக சுகாதார அமைப்பினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version