செய்திகள்
ஐரோப்பாவையும் விட்டு வைக்காத ஒமிக்ரான்!
ஐரோப்பாவிலும் ஒமிக்ரான் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றில் புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுகளை கண்டறிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒமிக்ரான் கட்டுப்படுத்த கடுமையான புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
அத்தோடு தென்னாபிரிக்காவிருந்து பயணம் செய்வதற்கு பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்ததோடு, அந்நாட்டை சிவப்பு பட்டியலிலும் சேர்த்துள்ளது.
இந்த கொரோனா மாறுபாடு முதலில் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் பெல்ஜியம், போட்ஸ்வானா, இஸ்ரேல் மற்றும் ஹொங்கொங்கிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பியாவில் இதன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வைரஸ் எந்த தடுப்பூசியாலும் கட்டுப்படுத்த முடியாதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world
You must be logged in to post a comment Login