செய்திகள்

ஆப்கான் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த இத்தாலி!!

Published

on

ஆப்கான் பெண்ணுக்கு இத்தாலி அடைக்கலம் கொடுத்துள்ளது .

1985ம் ஆண்டு ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழின் அட்டை படத்தில் வெளியிடப்பட்ட ஆப்கான் பெண்மணிக்கு இத்தாலியில் வாழ்வதற்கு இத்தாலியின்  பிரதமர் அனுமதி கொடுத்துள்ளதாக இத்தாலி செய்திகள் தெரிவித்துள்ளன.

‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழிலில் அட்டை படத்தில் பிரசுரிக்கப்பட்ட பெண்மணி 12வயதான ஷர்பத் குலா என்ற ஆப்கான் பெண் ஆவர்.

இவர் பஸ்தூன் இனத்தைச்சேர்ந்த,  தாய், தந்தையரை இழந்தவராவர்.

இவர் ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையிலுள்ள அகதிமுகாம் ஒன்றில் வாழ்ந்தவர்.

இவரை 1984ம் ஆண்டு ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ என்னும் இதழ் ஒன்று தனது அட்டை படத்தில் வெளியிட்டது.

பல வருடங்களின் அவரை பாகிஸ்தானில் கண்டுபிடித்த இத்தாலி அவருக்கு தற்போது தனது நாட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளதாக இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர் இத்தாலி வரும்போது அவருடைய வயது 40 என்பது குறிப்பிடத்தக்கது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version