செய்திகள்
துறைமுகத்தில் சிக்கிய கொள்கலன்கள்! – விசாரணைகள் விரைவில்
கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்கள் சிக்கியுள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டம் அரசால் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 1000 கொள்கலன்கள் எவ்வாறு சிக்கியுள்ளன என வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரனீ ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட கொள்கலன்கள் இருப்பதாக கூறப்படும் இவ்விடயம் குறித்த விசாரணைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படும். இவ் விசாரணையை மேற்கொள்ள அமைச்சின் உள்நாட்டு வர்த்தகத்திற்கு பொறுப்பான மேலதிக செயலாளர் நியமிக்கப்படுவார் என்றார்.
மேலும், குறித்த கொள்கலன்கள் சிக்கினால் அதனை விடுவிக்க தேவையான டொலர் தொகை மத்திய வங்கியிடம் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login