செய்திகள்

கனடா சென்றவர்களை திருப்பியனுப்பும் அதிரடி நடவடிக்கை!-

Published

on

இந்தியா- தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாமில் தங்கியிருந்த ஈழ அகதிகள், கனடாவிற்கு தப்பிச் சென்றபோது மாலைதீவில் அகப்பட்டனர்.

அவர்களில், 60 பேரினது பெயர் விபரங்களை மாலைதீவு அரசாங்கம் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஈழத்தில் இருந்து உயிர் தப்பி தமிழ்நாட்டிற்குச் சென்றவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி தமிழ்நாடு அகதி முகாம்களில் இருந்து தப்பி, மீன்பிடி விசைப்படகு மூலம் கனடாவிற்கு பயணித்தனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக மாலைதீவை அண்டியுள்ள அமெரிக்கப்படைக் கட்டுப்பாட்டுத் தீவில் குறித்த 60 பேரும் சிக்கிக்கொண்டனர்.

அவ்வாறு அகப்பட்டவர்களை அமெரிக்கப்படைகள் மாலைதீவு அரசிடம் கையளித்த நிலையில், அனைவரும் இந்தியாவில் இருந்து புறப்பட்டதனால் இந்திய அரசுக்கு, மாலைதீவு அரசு 60 பேரையும் பொறுப்பேற்குமாறு கோரி, பெயர் விபரங்களை அனுப்பிவைத்துள்ளது.

மாலை தீவு அரசு அனுப்பிவைத்துள்ள குறித்த பட்டியலில் அனைவரின் பெயர் விபரங்களுடன், எந்த முகாமில் இருந்து தப்பிச் சென்றவர்கள் என்ற விபரமும் எழுதப்பட்டுள்ளது.

பெயர் விபரங்கள் வருமாறு;

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version