செய்திகள்

பசுமைக் கண்காட்சி நிகழ்வு! – இந்திய துணைத்தூதரகம் அறிக்கை

Published

on

கடந்த நவம்பர் 20ம் திகதியன்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் பசுமைக் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது

குறித்த தெளிவுபடுத்தல் அறிக்கையில்,

கடந்த நவம்பர் 20ம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வில் கலந்துகொண்ட அவர் கார்த்திகைப் பூ சூடிய விடயம் தொடர்பில் இணையத்தளங்களில் பல்வேறு திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த நிகழ்வு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வு என திரிபுபடுத்தப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு இந்திய தூதரகத்தினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அறிக்கையொன்று இன்று வெளியாகியுள்ளது.

மரக்கன்றுகள் விநியோக நிகழ்வு தொடர்பான பல தவறான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தமை கவனத்திற்கு வந்தன.

யாழ். இந்தியத் துணைத் தூதுவர், அழைப்பின் பேரிலேயே இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்வின் பங்கேற்பு அமைப்பாளர்கள் அல்லது அவர்களின் செயல்களுடன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்கு வெளியே, எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. இது தொடர்பில் அவருக்கு எந்த முன் அறிவித்தலும் வழங்கப்படவில்லை – என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version