செய்திகள்
தடை செய்யப்பட்டது பிளாஸ்டிக் உற்பத்தி.
சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் முயற்சிகளில் ஒரு பகுதியாக “ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது”.
நாட்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து இந்த ஆண்டு குறித்த தடை உத்தரவை அரசு அமுலாக்கியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கான முதல் படி என அரச நிபுணர்கள் கூறியுள்ளதோடு: பிளாஸ்டிக் மாற்றுப் பயன்பாட்டை கட்டுப்படுத்தல், மறுசுழற்சியை மேம்படுத்தல் மற்றும், சிறந்த கழிவுப் பிரிப்பு மேலாண்மை ஆகியவற்றைக் கொண்ட கொள்கைகள் போன்ற முக்கியமான கட்டமைப்பு சிக்கல்களும் கருத்திற்கொள்ளப்படும் என சுட்டிக்காடியுள்ளனர்.
அத்தோடு, இவ் அமுலாக்கம் இருப்பதை அனைத்து தொழிற்துறை பங்குதாரர்களும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதோடு, தங்கள் அமைப்புக்களையும் வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
விசேடமாக, குறித்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நபர்கள் மற்றும், தொழிற்சாலைகள் பற்றிய தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு தகுந்த சன்மானம்மும் பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் வலியுருத்தியுள்ளது.
#IndianNews
You must be logged in to post a comment Login