செய்திகள்

பாரவூர்திகளில் மறைந்திருந்த ஏதிலிகள்!

Published

on

மெக்ஸிக்கோவில் பாரவூர்திகளில் மறைந்திருந்த ஏதிலிகள் அந்நாட்டு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மெக்ஸிக்கோவில் இரண்டு பாரவூர்திகளில் மறைந்திருந்த 600 ஏதிலிகளை அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

600 பேரும் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய 455 ஆண்களும் 145 பெண்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் குவாட்டமாலாவை சேர்ந்த 401 பேரும், பங்களாதேஷை சேர்ந்த 27 பேரு, இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஹொண்டுராஸ், டொமினிக்கன், நிக்கரகுவா, எல்-சல்வடோர், கியூபா மற்றும் ஈக்குவடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த நாடுகளில் உள்ளவர்கள் மெக்ஸிக்கோ வழியாக மத்திய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நோக்கி நகர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மெக்ஸிக்கோ அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version