செய்திகள்

‘கார்த்திகை வாசம் மலர் முற்றம்’ – யாழில் ஆரம்பம்

Published

on

‘கார்த்திகை வாசம் மலர் முற்றம்’ யாழில்  இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று(20)முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை, தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 7மணி வரை
மலர் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது.

இந்த மலர் முற்றத்தை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் திறந்துவைத்தார்.

ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன், யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்திபன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த காலப்பகுதியில், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தால், பாடசாலை மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version