செய்திகள்

தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு!

Published

on

யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம், விதாதா, ஸ்ரீலங்கா ரெலிகொம், சனச அபிவிருத்தி வங்கி, மக்கள் வங்கி ஆகிவற்றின் ஆதரவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வட மாகாணம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் சார்ந்த ஆலோசனைகள் வழிகாட்டல் என்பவற்றை வழங்குவதே இதன் நோக்கம்.

அவர்களது நிலையை மேம்படுத்தி நாட்டுக்கும் அவர்களும் பலனை பெற இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத் தலைவர் மணில் ஜெயசிங்க, சனச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லக்ஷ்மன் அபேசேகர, நந்திக்க புத்திபால, யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் விதாதா இயக்குனர், ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா டெலிகொம் வட பிராந்திய முகாமையாளர் சிவானந்தன், யாழ்ப்பாணம் வர்த்தக மன்றத்தின் தலைவர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மற்றும் பிரதேச விதாதா அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version