செய்திகள்

கடுமையான புயலால் கனடா பாதிப்பு!

Published

on

கடுமையான புயலால் கனடா பாதிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான புயல் மாற்று கன மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வான்கூவர் நகரை சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது.

இந்த புயலை தொடர்ந்து அங்கு கன மழை பெய்த தொடங்கியது.

ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன .

இதில் இந்த ஒட்டுமொத்த பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சற்றும் இடைவிடாது பெய்த கன மழையால் வான்கூவர் நகரில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டள்ளது.

இதனால் ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது .

வான்கூவர் நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது .

வீதிகளில் ஆறாக ஓடும் வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மிதப்பதை காண முடிந்தது.

வான்கூவர் நகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும்புகையிரத பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இ

தன் காரணமாக கனடாவின் மற்ற பகுதிகளுடன் வான்கூவரை இணைக்கும் வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

அங்குள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அந்த வழியாக சென்ற வாகனங்கள் பல சிக்கியுள்ளன.

இதில் ஒரு பெண் சாவடைந்ததாகவும், 2 பேர் மாயமாகி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில் நிலச்சரிவு ஏற்பட்டபோது எத்தனை வாகனங்கள் சிக்கின என்பது இன்னும் உறுதி செய்யப்படாததால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

இதனிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட வீதிகளில் சிக்கியிருந்த 300-க்கும் அதிகமானோர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

கனடாவின் மிகப்பெரிய துறைமுகம் வான்கூவரில் உள்ளது. அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து புகையிரத போக்குவரத்தையும் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version